சென்சார் ரிவைசிங் கமிட்டி உறுப்பினருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் ஜனநாயகன் படம் பார்ப்பது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய் நடித்திருக்கும் கடைசி படமான ஜனநாயகன் படத்தை பார்த்த சென்சார் போர்டு, அதனை மறு தணிக்கை குழுவுக்கு பரிந்துரை செய்தது.
இதனை எதிர்த்து தயாரிப்பு தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உயர்நீதிமன்றத்திலும் சாதகமான தீர்ப்பு வராததால் படத்தை மறுதணிக்கை குழுவுக்கு அனுப்ப தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது.
இதனை தொடர்ந்து, பிப்ரவரி 9ஆம் தேதி சென்சார் போர்டின் மறுத்தணிக்கை குழுவிடம் ஜனநாயகன் படம் சமர்பிக்கப்பட்டது. 10 பேர் கொண்ட மறு தணிக்கை குழுவினர் ஜனநாயகன் படத்தை பார்த்து கருத்து தெரிவிக்கவிருந்த நிலையில், குழுவில் உள்ள ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், ஜனநாயகன் படம் பார்ப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
















