கோவை அருகே அரசுப் பள்ளியில் மதிய உணவு உண்டு உடல்நலக்குறைவு ஏற்பட்ட மாணவர்களை தாமதமாக மருத்துவமனையில் அனுமதித்தது ஏன் என கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பல்லி விழுந்த மதிய உணவை உட்கொண்ட 44 மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் .தொடர்ந்து சிகிச்சை முடிந்து அனைவரும் வீடு திரும்பினர்.
முன்னதாக அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர் ஜி.அருண்குமார் நலம் விசாரித்தார்.
மதிய உணவுக்கு பின் உடல்நலக்குறைவு ஏற்பட்ட மாணவர்களை தாமதமாக மருத்துவமனையில் அனுமதித்தது ஏன் என்றும் அவர் கேகவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி ஆர்.ஜி.அருண்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
















