நாமக்கல்லில் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்பட்டு பாஜக சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அண்மையில் வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வணிக பயன்பாட்டு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில், நாமக்கல்லில் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதுகுறித்து பாஜக விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாநில பொறுப்பாளர் நரேஷ் ராஜசேகர் கூறுகையில், பொதுமக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை போக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்தாக தெரிவித்தார்.
















