மானாமதுரையில் ஆகாஷின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 5 நாட்களாக நடத்தி வரும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆகாஷ் மரணத்திற்கு நீதி வேண்டியும், அவரது உடலை வாங்க மறுத்தும் 5 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக மானாமதுரை வழி விடு முருகன் கோயில் எதிரே உள்ள சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஆகாஷின் உறவினர்களின் மறியலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவுகிறது.
















