பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்காத தமிழக அரசை கண்டித்து மாவட்டந்தோறும் வரும் 15 ம் தேதி ஆர்பாட்டம் நடைபெறும் என தமிழக பாஜக மாநில தலைவ்ர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்கள் அதிகரித்து, நாடெங்கும் தலைவிரித்தாடுகிறது. இத்தகைய குற்றங்களை தடுத்து, பெண்களை பாதுகாக்கத் தவறிய திமுக அரசை கண்டிக்கும் வகையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வரும் மார்ச் 15-ந் தேதி, மாலை 4 மணியளவில் “பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்களை கண்டிக்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்” மாவட்டம்தோறும் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் நயினார் கேட்டுக்கொண்டுள்ளார்.
















