சென்னையில் இருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக பயணம் மேற்கொண்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள காஸ்மோபாலிடன் கிளப்பில் இருந்து 11 கார்களில் லடாக் நோக்கி பயணம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. 11 கார்களில் லடாக் செல்லும் குழுவினர் 19 ஆயிரம் அடி உயரமுள்ள உம்லிங் லா பகுதியைச் சென்றடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுவாரசிய பயணத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பலரும் குடும்பத்தினருடன் சென்றுள்ளனர். இந்த கார் பயணத்தில் ஊடகத்துறையைச் சேர்ந்த சங்கீதா என்பவரும், கலந்து கொண்டு தனியாக பயணம் மேற்கொள்கிறார்.
இந்த கார் பயணம் அனைவருக்குமான சாகச பயணத்தை முன்னிறுத்தி தொடங்கி உள்ளதாகவும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பை முன்னிறுத்தி பயணத்தை தொடங்கியுள்ளதாகவும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
















