அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து தேர்தல் தேதியை அறிவித்தார்.
அதன்படி அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுவதாக கூறினார்.
5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் வரும் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
















