கர்நாடக சட்டப்பேரையில் நேற்று உறுப்பினர்கள் சார்பில் ஏராளமான கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றில் சில கேள்விகளுக்கு மட்டுமே அமைச்சர்கள் தரப்பில் பதிலளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சபாநாயகர் காதர், இந்த சபை அமைச்சர்களுக்கானது அல்ல என்றும், இது மூன்று மாதங்களுக்கு ஒருமுறைகூடி தங்கள் பிரச்னைகளைப் பற்றி விவாதிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கானது எனவும் குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட சில கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்துவிட்டு மீதமுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கப்படாவிட்டால் அவைக்கு ஏன் வர வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார். தெளிவான உத்தரவுகள் இருந்தபோதிலும் எந்த முன்னேற்றமும் இல்லையென கூறிய சபாநாயகர் காதர், இந்த சபையை எப்படி நடத்துவது? எனக் கேள்வி எழுப்பினார். எனவே, சம்பந்தப்பட்ட அமைச்சர்களும், செயலாளர்களும் விளக்கம் அளிக்கும் வரை, சபையை நடத்த மாட்டேன் என்று சபாநாயகர் காதர் கூறி, சபையை ஒத்திவைத்து வெளிநடப்பு செய்தார்.
















