எரிவாயு சிலிண்டர் விநியோகம் தடையின்றி தொடருவதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாமென இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்தியன் ஆயில் நிறுவனம், நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கு எரிவாயு சிலிண்டர் சீராக கிடைப்பதை தொடர்ந்து உறுதி செய்கிறது என தெரிவித்துள்ளது.
தட்டுப்பாடு எற்படுமோ என்ற அச்சத்தால், வாடிக்கையாளர்கள் சிலர் முன்கூட்டியே முன்பதிவு செய்வதாகவும் இதனால் தற்காலிக தேவை அதிகரித்து விநியோகம் பாதிக்கப்படும் எனவும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
















