தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு - சிறப்பு தொகுப்பு!
Mar 18, 2026, 07:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 18, 2026, 06:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநிலம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், பெண்கள் பாதுகாப்புக்காக மத்திய அரசு உருவாக்கிய நிர்பயா நிதி தமிழ்நாட்டில் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது. அதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2019-ல் 6 ஆயிரத்து 984 வழக்குகளும், 2020-ல் 6 ஆயிரத்து 630 வழக்குகளும், 2021-ல் 8 ஆயிரத்து 501 வழக்குகளும், 2022-ல் 9 ஆயிரத்து 207 வழக்குகளும், 2023-ல் 8 ஆயிரத்து 943 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

மொத்தமாக இந்த காலகட்டத்தில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, சமீபத்தில் தூத்துகுடி மாவட்டம், விளாத்திகுளத்தில் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், மத்திய அரசு கொண்டு வந்த நிர்பயா நிதியின் பயன்பாடு குறித்து கடும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில், மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு நிர்பயா நிதியை அறிமுகப்படுத்தியது. இந்த நிதி மூலம் பாதுகாப்பான பொது இடங்கள் அமைத்தல், சிசிடிவி கண்காணிப்பு, அவசர உதவி மையங்கள், One Stop Centre, Women Helpline 181, Safe City போன்ற திட்டங்களை செயல்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தமிழ்நாட்டிற்கு நிர்பயா நிதியாக மொத்தம் 425.06 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. அதில் 353.69 கோடி ரூபாய் வரை விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசால் 45.86 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அரசின் குறைந்த அளவு செலவினமே பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலவீனமடைய முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அத்துடன் சென்னை காவல்துறை மூலம் இந்த நிதியில் இருந்து, பெண்கள் பாதுகாப்புக்கான ரோந்து, கட்டுப்பாட்டு மையங்கள், கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் Women Helpline சேவைகள் போன்ற சில திட்டங்களுக்கு மட்டுமே செலவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, பெண்கள் பாதுகாப்பைத் தாண்டி அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கூட அரசால் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டும்முன்வைக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், அவர்களின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன்படுத்தப்படாதது, அரசின் செயல்திறன் குறித்த கேள்விகளை பொதுமக்கள் மத்தியில் தீவிரமாக எழுப்பியுள்ளது.

Tags: crimes against women'Nirbhaya Fund'Tamil Naducentral governmentDMK government
ShareTweetSendShare
Previous Post

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

Next Post

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

Related News

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

புதுச்சேரி இண்டி கூட்டணியில் குழப்பம் – தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில், முதலியார்பேட்டையில் திமுக எம்எல்ஏ மனுத்தாக்கல்!

அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே கிடையாது – பிரதமர் மோடி

வடகொரியா நாடாளுமன்ற தேர்தல் – கிம் ஜாங் உன் வெற்றி பெற்றதாக அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies