உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் படகில் இப்தார் விருந்து நடத்தி அசைவ உணவுகளை புனிதமான கங்கை ஆற்றில் வீசியதாக 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
புனித நதியாக கருதப்படும் கங்கையில், ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் இந்துக்கள் புனித நீராடி செல்கின்றனர்.
இந்நிலையில் கங்கை ஆற்றில் படகில் சிலர் இப்தார் பார்ட்டி நடத்துவதாக போலீஸாருக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், படகில் சென்று கங்கை ஆற்றில் இப்தார் விருந்து நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
















