மேற்குவங்க மாநிலத்தில் அமலாக்கத்துறை சோதனையின் போது I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த மம்தா பானர்ஜிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவில், திரிணமுல் காங்கிரஸ் ஐ.டி., பிரிவு தலைவரும், I-PAC நிறுவனத்தின் இயக்குநருமான பிரதீக் ஜெயின் வீடு மற்றும் அலுவலகத்தில், அமலாக்கத்துறை கடந்த ஜனவரி மாதம் சோதனை நடத்தியது.
அப்போது, அலுவலகத்திற்குள் நுழைந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அங்கு கைப்பற்றி வைக்கப்பட்டு இருந்த முக்கிய ஆவணங்களை அத்து மீறி பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அமலாக்கத்துறை தரப்பு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயலில் மம்தா பானர்ஜி ஈடுபட்டதாக குற்றம் சாட்டியது.
அதேபோல் இந்த சோதனை நிலக்கரி ஊழல் வழக்குடன் தொடர்புடையது என்றும் அமலாக்கத்துறை விளக்கமளித்தது. ஆதாரங்களின் அடிப்படையில் நடைபெற்ற இந்த சோதனை எந்த அரசியல் அமைப்பையும் குறிவைத்து அல்ல என்றும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
இந்த வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், சோதனையின் போது முதலமைச்சர் மம்தா உள்ளே நுழைந்தது சரியான செயலா என கேள்வி எழுப்பியது. மேலும் மம்தா பானர்ஜி சோதனையின் போது நேரில் சென்றது மகிழ்ச்சிகரமான சூழல் அல்ல என்றும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
















