டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சந்தித்து பேசினார் .
டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. தமிழக சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுகவுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகள் குறித்து அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் ஆலோசித்ததாக தெரிகிறது. மேலும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.
















