தவெகவை தனியாக நிற்க வைத்து தோற்கடிப்பதே திமுகவின் திட்டம் என லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்துள்ளார்.
பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயைத் தனியாக நிற்க வைத்து தோற்கடிப்பதே திமுகவின் திட்டம் என தெரிவிததார். “தமிழக வெற்றிக் கழகத்திற்குள் திமுகவினர் ஊடுருவியுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி போன்றோர் தவெக-வை யாருடனும் கூட்டணி வைக்க விடாமல் தடுக்கும் வேலைகளில் ஈடுபடுவதாக அவர் சாடினார், ஆதவ் அர்ஜுனா தனது அஜெண்டாவைச் சரியாகச் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
















