சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு நேரில் சென்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான என்டிஏ கூட்டணியின் தொகுதி பங்கீடு நிறைவு பெற்ற நிலையில், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேரில் சென்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
எந்ததெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்தும், வேட்பாளர் தேர்வு குறித்தும் அவர்கள் இருவரும் ஆலோசித்தாக தெரிகிறது. மேலும், தேர்தல் பிரச்சார வியூகம் குறித்தும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
















