சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பெரிய மாரியம்மன், காளியம்மன் கோயில் திருவிழாவின் துவக்க நாளையொட்டி எருது அழைப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
இளம்பிள்ளை, அயோத்தியாபட்டினம் உட்பட 8 ஊரைச் சேர்ந்த எருதுகளை கடந்த 10 நாட்களாக பராமரித்து அதற்காக விரதமிருந்து மேள தாளங்கள் முழங்க கோயிலை நோக்கி அழைத்து வந்தனர்.
அலங்கரிக்கப்பட்ட ஒவ்வொரு எருதுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
எருதுகளுக்கு பூஜை செய்தால் தங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
















