புதுக்கோட்டை மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரமாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டையில் வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் ஒரு விழிப்புணர்வு இயக்கத்தை ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, திடல் ஒன்றில் மாணவ மாணவிகளை திரட்டி, அவர்களை வாக்குப்பதிவை குறிக்கும் வடிவில் அமரவைத்து பொதுமக்களுக்கும், முதல் தலைமுறை வாக்காளர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்தனர்.
இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் அருணா தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
















