கோவையில் பழைய துணிகளை வாங்கும் போது தவறுதலாக கிடைத்த 12 சவரன் தங்க நகைகளை உரிமையாளரிடம் திரும்ப கொடுத்த வியாபாரியின் நேர்மையை போலீசார் பாராட்டினர்.
மேட்டுப்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் பழைய துணி வாங்கி விற்பனை செய்து வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன் காரமடை அருகே ஆசிரமத்தில் தேவையில்லாத துணிகள் இவரிடம் கொடுக்கப்பட்டது.
அதனை வாங்கி தரம் பிரித்தபோது சேலையிலிருந்து ஒரு மணி பர்ஸ் கீழே விழுந்தது.
அதில் 12 சவரன் தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நகைகளை சிறுமுகை காவல் நிலையத்தில் செந்தில்குமார் ஒப்படைத்தார்.
இதையடுத்து நகையை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். தவறுதலாக வந்த நகைகளை பதுக்கி வைத்துக் கொள்ளாமல் நேர்மையாக ஒப்படைத்த செந்தில்குமாரை காவல்துறையினர் பாராட்டினர்.
















