இந்தியாவில் இணையத்துடன் இணைக்கப்பட்ட CCTV கேமராக்களை விற்பனை செய்வதற்கு சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய விதிகளைக் கொண்டு வந்துள்ளது.
அதன்படி, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சிசிடிவி கேமராக்களுக்கு Standardisation Testing and Quality Certification சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீனாவின் Hikvision, Dahua மற்றும் TP-Link போன்ற முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள் மற்றும் சீன சிப்செட்களைப் பயன்படுத்தும் கேமராக்களுக்கு இந்தச் சான்றிதழ் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அந்த சிசிடிவி கேமராக்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
தரவு திருட்டு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கேமராக்களை சட்டவிரோதமாக கட்டுப்படுத்தும் அபாயத்தை தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
















