தாம்பரம் அருகே பேனர் வைப்பது தொடர்பாக பொதுமக்களுடன் திமுக பெண் கவுன்சிலரின் தந்தை, கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை தாம்பரம் மாநகராட்சியின் 38வது வார்டு கவுன்சிலரான சரண்யா என்பவரின் தந்தைக்கும், அஸ்தினாபுரம் பகுதி மக்களுக்கும் பேனர் வைப்பது தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், அஸ்தினாபுரம் வினோபாஜி நகரில் உள்ள கோயில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் வருவாய்த்துறையினர் அகற்றியுள்ளனர்.
அதே பகுதியில் புதிய பேனரை அமைக்க முயன்ற பொதுமக்களுடன் கவுன்சிலரின் தந்தை, கணவர் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















