ஸ்டாலின் அரசால் முடக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் அதிமுக ஆட்சியில் மீண்டும் செயல்படுத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பரமக்குடியில் பரப்புரை மேற்கொண்ட அவர், சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்தியாவில் கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு என்றும், எந்த ஒரு வரி வருவாயும் இல்லாமல் அதிமுக ஆட்சி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
திமுக ஆட்சியில் சிறுமிகள்,பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியவில்லை என்றும், அதிமுகவை யாரலும் அழிக்க முடியாது என்றும் இபிஎஸ் குறிப்பிட்டார்.
















