மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தில் 15 நாட்கள் தங்கி தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்போவதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அம்மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்க அரசால், மக்கள் படும் துன்பங்களை தனது பிரச்சாரத்தில் எடுத்துரைத்து வருகிறார்.
இந்நிலையில், பபானிபூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க மூத்த தலைவர் சுவேந்து அதிகாரிக்கு ஆதரவாக அமித்ஷா, ரோடு ஷோவில் பங்கேற்றார். அப்போது, பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
















