தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அக்கட்சியின் தேசிய பொதுக்கு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், திமுகவின் ஊழல், துரோகம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆதரவுடன் வேட்பாளர்கள் களம் காண்பதாக தெரிவித்துள்ளார்.
தோல்வி, ஆணவம், சுயநலம் மட்டுமே கொண்ட திமுக அரசால் தமிழகத்தின் வளர்ச்சி பின்தள்ளப்பட்டுள்ளது என்றும், NDA வேட்பாளர்களுக்கு ஆதரவாக தோளோடு தோள் நின்று பிரச்சாரம் மேற்கொள்வேன் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
















