விஜய் தேர்தல் அரசியலுக்கு அவசரப்படக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத ஒரு முதலமைச்சர் தேவையா? என கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் நாளொன்றுக்கு 5 கொலைகள், 35 பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுகிறது என்றும், “போதைப்பொருட்கள் புழக்கத்தால் இளைஞர்கள், மாணவர்கள் சீரழிகின்றனர் என்றும் அவர் கூறினார்.
தவெக தலைவர் விஜய் அரசியலில் அவசரப்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்கின்ற நோக்கம் விஜய்க்கும் உள்ளது என்றும், ஆனால் “விஜயின் வருகை மீண்டும் திமுக ஆட்சிக்கு வர காரணமாகிவிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாத அளவிற்கு தோல்வியை சந்திக்கும் என அன்புமணி ராமதாஸ் கூறினார்.
















