பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதா மற்றும் அவரது மகன் மிதுன் ஆகியோர் பழனிக்கு வருகை தந்து மலைக்கோயிலில் உள்ள முருகப்பெருமானை வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரும் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், தவெகவின் மாநில நிர்வாகிக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனும் பழனி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
















