தவெக அரசின் மெத்தனத்தால் பயங்கரவாதிகளின் புகலிடமான தமிழகம் - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Oct 10, 2026, 09:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவெக அரசின் மெத்தனத்தால் பயங்கரவாதிகளின் புகலிடமான தமிழகம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 9, 2026, 06:54 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தவெக அரசின் மெத்தனத்தால் பயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறியுள்ளதாக பா’ஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :  தஞ்சாவூர் மற்றும் கோவையில் என்.ஐ.ஏ (NIA) அமைப்பால் கைது செய்யப்பட்ட 7 பேருக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த கொடூர பயங்கரவாத அமைப்பான ‘ஷாசாத் பட்டி நெட்வொர்க்’குடன் நேரடித் தொடர்பு இருப்பது அம்பலமாகியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

எல்லை தாண்டிய பயங்கரவாத சக்திகளும், சமூக விரோதக் கும்பல்களும் தமிழகத்திற்குள் இந்த அளவிற்குப் பெருமளவில் ஊடுருவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து வருவது, மாநிலத்தில் உளவுத்துறையும் காவல்துறையும் முற்றிலுமாக செயலிழந்துவிட்டதையே காட்டுகிறது.

குறிப்பாக, விநாயகர் சதுர்த்திப் பண்டிகையின் போது ‘குண்டு வெடிக்கும்’ எனப் பகிரங்கமாக மிரட்டல்கள் விடுக்கப்பட்டதும், முக்கிய வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்து நாசவேலைகளுக்குத் திட்டமிட்டு உளவு பார்த்ததும் தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு எந்த அளவிற்குப் படுமோசமாகச் சீர்குலைந்து போயுள்ளது என்பதை அப்பட்டமாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

சட்டம் – ஒழுங்கு மற்றும் காவல்துறையைத் தன் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் விஜய் இந்த ஒட்டுமொத்தப் பாதுகாப்புத் தோல்விக்கும் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

அதிகாரம் தன் கையில் இருந்தும் இத்தகைய அபாயகரமான ஊடுருவல்களைத் தடுக்கத் தவறிய தவெக அரசின் மெத்தனப் போக்கிற்கு பாஜக சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், தமிழக மக்களின் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய, NIA-வுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, தேசவிரோத சக்திகள் மீது இரும்புக்கரம் கொண்டு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: bjp nainar nagendrannainar nagendran campaignmla nainar nagendranTVK governmentnainar nagendran plannainar nagendran liveNianainar nagendran controversyterroristsNainar NagendranNainar Nagendran speechnainar nagendran bjp
Share
Tweet
SendShare
Previous Post

இடைத்தேர்தல் முடிவால் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படாது – வானதி சீனிவாசன்

Next Post

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

Related News

பிரதமர் மோடி சென்னை வருகை – தமிழக பாஜக சார்பில் ஃபிளாஷ் மாப் நடன நிகழ்ச்சி!

முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு – DVAC பதிலளிக்க உத்தரவு!

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 23 வரை நீட்டிப்பு!

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி – பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்!

இடைத்தேர்தல் வெற்றி மூலம் தவெக ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர் – செங்கோட்டையன்

தவெக எனும் தற்காலிக வெற்றி கழகத்தின் சோதனையையும் அதிமுக முறியடிக்கும் – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி; முதலமைச்சர் விஜய்

இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்த கம்யூனிஸ்டுகள்; பெரும் பின்னடைவு

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை இழந்த அதிமுக; 3வது இடத்தில் பின்தங்கியது

பிரசாரத்தின் போது கடும் எதிர்ப்பை சந்தித்த சத்யபாமா; 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை கைப்பற்றிய தவெக; இடைத்தேர்தலில் அபாரம்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்; தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி

நகோம் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வெற்றி

மே.வங்கத்தின் நந்திகிராம், ரெஜி நகர் தொகுதி இடைத்தேர்தல்; பாஜக அபார வெற்றி

2047க்குள் வளர்ந்த இந்தியா : பிரதமர் மோடி தலைமையில் உருவெடுக்கும் புதிய பாரதம் – சிறப்பு தொகுப்பு!

மேட்டூர் அணை திறந்தும் கடைமடைக்கு செல்லாத தண்ணீர் : கருகும் சம்பா பயிர்கள் – வேதனை தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies