அதிமுகவின் 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகிய 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ரத்து செய்யக் கோரி, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் எம்.எல்.ரவி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
தகுதிநீக்க மனு அளித்த கொறடாவிற்கு நோட்டீஸ் அனுப்பாமலும், குதிரை பேரம் குறித்து முழு விசாரணை நடத்தாமலும் அவசர அவசரமாக ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அதிமுக தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவைச் செயலாளர் தரப்பில், சுய விருப்பத்தின் பேரில் அளிக்கப்பட்ட ராஜினாமாவை ஏற்காவிட்டால் அரசியல் சாசனக் கடமையைச் செய்யத் தவறியதாகிவிடும் என தெரிவிக்கப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, இன்று காலை இந்த வழக்கில் இறுதி தீர்ப்பளிக்கிறது.
















