தேசமே முதன்மை என்ற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் : மோகன் பாகவத்
Oct 20, 2026, 06:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசமே முதன்மை என்ற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் : மோகன் பாகவத்

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 20, 2026, 06:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கேவார் நினைவிடத்தில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மலரஞ்சலி செலுத்தினார்.

1925 ஆம் ஆண்டு விஜயதசமி திருநாளில் தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஹெட்கேவாரால் தொடங்கப்பட்டது. இதனையொட்டி, அமைப்பின் தொடக்க விழா மற்றும் விஜயதசமி விழாவை முன்னிட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைதொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகளிலும் மோகன் பாகவத் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், வேற்றுமையில் ஒற்றுமை என்பதே பாரதத்தின் சிறந்த பண்பு என்று  பெருமிதம் தெரிவித்தார்.

ஓடிடி தளங்களைக் கட்டுப்படுத்த சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும், வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய இளம் தலைமுறையினர் முன்வர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், சுரண்டலுக்கான கருவியாக ஏஐ மாறி விட்டதாக கவலை தெரிவித்த ஆமோகன் பாகவத், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இளைஞர்கள் திறம்பட பயன்படுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.

தேசமே முதன்மை என்ற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் என்றும், நாட்டின் பன்முகத்தன்மையை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் கூறினார்.

உலகம் மிகவும் கடினமான சூழல்களை எதிர்கொண்டு வருகிறது என்றும், பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இந்தியா வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது என்றும் தெரிவித்தார்.

அடிமைத்தனத்தை எதிர்த்து நூற்றாண்டு காலமாக போராடினோம் என்றும், அதிகார போட்டிக்கான போர்கள் உலகை அழிவை நோக்கி இழுத்துச் செல்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

விவேகத்தை புதிய தலைமுறைக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும் என்றும், உலகம் முழுவதும் புதிய தலைமுறையினர் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் அடிமைத்தனம் ஒரு தீவிர தேசிய பிரச்சினை என்றும், இதை எதிர்கொள்ள சமூகமும், அரசாங்கமும் உரிய நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Tags: mohan baghwatmohan bagawat controversyrss leader mohan bagawatrss chief mohan bagawatmohan bagawat latest speechMohan bhagawatMAHARASHTRANagpurMohan bagawatVijayadashami
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா – சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு!

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா – சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு!

விஜயதசமி பண்டிகை : குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!

கிக்பாக்ஸிங் உலகக் கோப்பை போட்டியில் 6 பதக்கங்கள் – தாயகம் திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி : 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!

மறைந்த சடகோபன்-ஜி உடலுக்கு ஆர்எஸ்எஸ், பாஜக மூத்த தலைவர்கள் அஞ்சலி!

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

Load More

அண்மைச் செய்திகள்

தேசமே முதன்மை என்ற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் : மோகன் பாகவத்

எடப்பாடியில் காலைக்கதிர் சார்பில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி – குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

விரைவில் பாரிஸ் இஸ்லாமிய நகரமாக மாறிவிடும் – டிரம்ப் எச்சரிக்கை!

நாகர்கோவில் அருகே வனமாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நவராத்திரி விழா கோலாகலம்!

பேனர் வைப்பதில் தகராறு – தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 10 பேர் கைது!

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – அன்ன வாகனத்தில் அம்பாள் வீதி உலா!

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பேச்ச்சுவார்த்தை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்!

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் குறித்து சர்ச்சை கருத்து – இந்தியா கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies