மல்யுத்த போட்டிகள் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்ற ஜான் சீனா, WWE போட்டிகளில் இருந்து தற்போது ஓய்வுபெற்றுள்ளார். இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அவர் குறித்த செய்தி தொகுப்பு ஒன்றை பார்க்கலாம்.
90ஸ் கிட்ஸ்களின் மறக்க முடியாத பொழுதுபோக்குகளில் முதன்மையானது WWE எனப்படும் World Wrestling Entertainment. அதில் வரும் அண்டர்டேக்கர், பிக் ஷோ, Triple H, edge, ஜேபிஎல், எட்டி குரேரோ, Rey Mysterio போன்ற பல வீரர்கள் மிகவும் பிரபலமானவர்கள். ஆனால், இவர்களில் அனைவராலும் விரும்படும் வீரர்கள் வெகு சிலரே.
அவர்களில் ஒருவர்தான் ஜான் சீனா. The Time Is Now என்ற தீம் மியூசிக்கை போட்டுக்கொண்டு அவர் ரிங்குக்குள் நுழைந்தால் போதும், அரங்கம் அதிர தொடங்கிவிடும். 1977ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி அமெரிக்காவில் உள்ள Massachusetts மாகாணத்தில் பிறந்தார் ஜான் சீனா. சிறு வயதிலேயே தற்காப்பு கலைகளை பயிலத் தொடங்கிய அவர், கல்லூரிபடிப்புக்குப் பின்னர் பாடி பில்டிங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
அந்தச் சமயத்தில் மல்யுத்தத்திலும் ஆர்வம் ஏற்படவே, கலிபோர்னியாவுக்கு சென்று அது தொடர்பான பயிற்சிகளில் ஈடுபட்டார். பின்னர் 2002ம் ஆண்டு “The Prototype” என்ற பெயரில் WWE போட்டிகளில் அவர்விளையாடத் தொடங்கினார். “Doctor of Thuganomics” என்ற பெயரிலும் களமிறங்கிய ஜான் சீனா, ஹிப்-ஹாப் rapper போல உடை அணிந்துக்கொண்டு, தனது எதிரிகளை பற்றி freestyle rap சாங் பாடுவார்.
இது அவருக்கு அதிகரசிகர்களைப் பெற்று கொடுத்தது. ராக், பாடிஸ்டா, ட்ரிப்பிள் ஹெச், பிக் ஷோ ஆகியோருக்கு எதிராக அவர் சண்டையிட்ட போட்டிகள் அனைத்தும் மிகவும் பிரபலமானவை. edge, ராண்டி ஆர்டன், jpl போன்றவர்கள் குறுக்கு வழியில் வெற்றி பெறுபவர்கள். ஆகவே, அவர்களுக்கு எதிராக ஜான் சீனா சண்டையிட்ட போட்டிகளில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது. u can’t see me என்பது ஜான் சீனாவின் புகழ்பெற்ற வசனம். ரிங்குக்கள் எதிரியை வீழ்த்திய பிறகு இந்த வரியை அவர் கூறுவார். அப்போது அரங்கில் உள்ள பார்வையாளர்களும் அவருடன் இணைந்து அந்த வரியை எதிரொலிப்பார்கள். ஒரு கட்டத்தில் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்றபடியே, ஹாலிவுட் படங்களிலும் ஜான் சீனா நடிக்கத் தொடங்கினார்
. அவர் நடித்த the marine, Trainwreck, Blockers, Bumblebee போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை. இப்படி, மல்யுத்த போட்டிகளிலும், திரைப்படங்களிலும் கோலோச்சி வந்த ஜான் சீனா, அண்மையில் wwe-ல் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்தார். அதன்படி ‘Saturday Night’s Main Event நிகழ்ச்சியில் அவரது கடைசி போட்டி நடைபெற்றது. ஜான் சீனாவின் கடைசி போட்டியை காண, அரங்கம் முழுவதும் அவரது ரசிகர்கள் நிறைந்திருந்தனர்.
அவரை எதிர்த்து போட்டியிடவிருந்த Gunther உள்ளே நுழைந்ததும் பார்வையாளர்கள் அவரை கிண்டல் செய்ய தொடங்கினர். அதே நேரம் ஜான் சீனா உள்ளே நுழைந்ததும் அனைவரும் உற்சாகக் குரலெழுப்பினர். போட்டி ஆரம்பமானதும், இவருமேசிறப்பாகச் சண்டையிடட தொடங்கினர். ஜான் சீனா தனக்கே உரிய சிக்னேச்சர் மூவ்களை செய்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினார்.
இருந்தபோதும், அவற்றையெல்லாம் சமாளித்து Gunther எதிர் தாக்குதல் நடத்தினார். ஒரு கட்டத்தில் குந்தர் போட்ட ‘Sleeper Hold’ பிடியில் இருந்து ஜான் சீனாவால் தப்ப முடியவில்லை. எனவே, அவர் தனது கடைசி தோல்வியை தழுவினார். இது அவரது ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனையடுத்து, WWE வீரர்கள் பலரும் ரிங்குக்கு வந்து ஜான் சீனாவுக்கு வாழ்த்து கூறி வழியனுப்பி வைத்தனர்.
அப்போது, ஜான் சீனா தனது ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். கேமராவை நோக்கியும் வணக்கம் செலுத்தினார். அவர் குறித்த குறும்படம் ஒன்றும் திரையிடப்பட்டது. இறுதியாக, அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் கண் கலங்கியபடி, ஜான் சீனாவுக்கு பிரியா விடை அளித்தனர். இவ்வாறாக WWE வரலாற்றில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது. ஜான் சீனா ஓய்வு பெற்றது, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
















