கொடைக்கானல் E-Pass நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று முதல் இ-பாஸ் எடுத்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனைச் சாவடியில் நகராட்சி பணியாளர்கள் இ-பாஸ் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இ-பாஸ் எடுக்காமல் வரும் வாகனங்களை நகராட்சி பணியாளர்கள் திருப்பி அனுப்பினர்.
ஒரே நேரத்தில் வாகனங்கள் சோதனை சாவடியில் திரண்டதால், அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டது.
வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடியில் இ-பாஸ் சேவை மையம் திறக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.