குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஊதா திருவிழாவில், மாற்றுத்திறனாளிகளுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துரையாடினார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அமிர்த தோட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற ‘Purple Fest’ நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘பர்பிள் ஃபெஸ்ட்’ (Purple Fest), எனப்படும் இந்த ஊதா திருவிழா, பல்வேறு குறைபாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளைப் புரிந்துகொண்டு அவர்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். விழாவின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளின் கலாச்சார நிகழ்ச்சிகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பார்வையிட்டார். கலை நிகழ்ச்சிக்குப் பிறகு, மாற்றுத் திறனாளிகளுடன் குடியரசுத் தலைவர் கலந்துரையாடினார்.
மாற்றுத்திறனாளின் உணவு திருவிழா, மாற்றுத்திறனாளிகளின் அனுபவங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இவ்விழாவில், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.