பொதுவாக ஆடி மாதத்தில் எந்த நல்ல காரியத்தையும் தொடங்க மாட்டார்கள் ஆடி போய் ஆவணி வந்தால் தான் எல்லாம் நடத்த வேண்டும் என்று யாரைக் கேட்டாலும் சொல்லுவார்கள் . இது உண்மையா?
ஆடி மாதம் என்றாலே அம்பிகை மாதம் . இதை சக்தி மாதம் என்றும் சொல்லுவார்கள்.
சூரியன் கடக இராசியில் சஞ்சரிக்கும் இந்த மாதத்தில் இருந்து தான் தக்ஷயண புண்ணிய காலம் தொடங்குகிறது.ஆடி மாதம் மழை பிறக்கும் மாதமாக இருப்பதால் தன இந்த ஆடி மாத பிறப்பை மிகச் சிறப்பாக கொண்டாடுகிறோம்.
ஸ்ரீ கருடாழ்வார் அவதரித்தது ,ஸ்ரீஆண்டாள் அவதரித்தது , ஸ்ரீஹயக்கீரிவர் அவதரித்தது, .அம்பிகைக்கு சங்கர நாராயணராக சிவபெருமான் காட்சி அளித்தது ,கஜேந்திர மோட்சம் நடந்தது , இப்படி பல தெய்வ நிகழ்வுகள் எல்லாம் இந்தப் புண்ணிய ஆடி மாதத்தில் தான் நடந்தது .
ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் கோபத்ம விரதம் கடைப்பிடிக்கப்படுவதும்,
ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் துளசியை வழிபடுவதும் ,
ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கௌரி விரதம் கடைப்பிடிப்பதுவும்,
ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிப்பதுவும்,
ஆடி மாதம் பவுர்ணமியில் வியாச பூஜை நடத்தவதும் ,
ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் முருகனை வழிபட்டு நன்மைபெறுவதுவும்,
திருநாவுக்கரசர் என்னும் அப்பரடிகளுக்கு திருவையாற்றில் சிவபெருமான் கைலாயக் காட்சி அருளியதும்,
ஆடி மாதம் ஸ்வாதியில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு கைலையில் இருந்து வெள்ளானை அனுப்பி இறைவன் அழைத்துக் கொண்டதுவும்,
பெருமிழிலைக் குறும்பர் சேரமான் பெருமான் முக்தி பெற்றதுவும் ,
ஆடி மாதம் பவுர்ணமியில் பட்டினத்தார் முக்தி பெற்றதுவும்
,மூர்த்தி நாயனார்,புகழ் சோழர் நாயனார் முக்தி பெற்றதுவும்,
என்று பற்பல தெய்வீக அற்புதங்கள் நிறைந்து இருப்பதாலும் ,ஆடியே ஒரு வழிபாட்டு மாதம் என்றால் மிகையி.ல்லை.
மொத்தத்தில் நலம் பெறும் மாதமாகவே இந்த ஆடி மாதம் விளங்குகிறது.
ஆடி மாதமே பித்ருக்களுக்கு வழிபாடு செய்ய உகந்த மாதம். எனவே இந்த மாதத்தில் பலரும் குடும்பம்,உற்றார் உறவினர் சுற்றத்தார் உடன் குலதெய்வத் கோயிலுக்குச் சென்று பொங்கலிட்டு ,நேர்த்திக் கடன் செலுத்தி,வழிபாடு இயற்றி வணங்கிவிட்டு வருவார்கள். எனவே தான் ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சிகளையும் தங்கள் குடும்பங்களில் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.
திருமணம் முடிந்த கையோடு மணமக்களைத் தனித்தனியே பிரிக்க வேண்டி இருக்குமோ என்ற காரணத்தால் தன ஆடி மாதம் திருமண வைக்க மாட்டார்கள்.
திருமணம் தான் ஆடி மாதத்தில் நடத்த மாட்டார்களே ஒழிய மற்றபடி புது வீடு குடி புகுதல் , வாடகைக்குக்
குடி போதல்,நிலம் வாங்குதல்,வீடு வாங்குதல்,சீமந்தம் வளைகாப்பு,பூப்புனித நீராட்டுநடத்துதல் , புதிய தொழில் ஆரம்பித்தல் , புது வேலையில் சேர்தல் , என அத்தனை மங்கள நிகழ்ச்சிகளையும் தாராளமாக நடத்தலாம் .
எந்த தப்பும் இல்லை.
ஆடி மாதம் குறித்த பயம் இனி வேண்டாம். ஆடி மாதத்தில் தான் ஆத்ம காரகனான சூரியன் ,மாத்ரு காரகனான சந்திரனின் கடக வீட்டில் பயணிப்பதால் , அம்மையப்பர் ஆக விளங்கும் சிவபெருமான் நம்
எல்லோருக்கும் நன்மைகளையே செய்வான் என்பதில் எவ்வித ஐயப்பாடும் தேவை இல்லை.