ஒரு விமானத்தில் பயணம் செய்ய தெரிந்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் என்னவென்று இந்த செய்தியில் பார்க்கலாம் .
நம்மில் பலருக்கு விமானத்தில் பயணம் செய்ய ஆசை இருக்கும் ஆனால் டிக்கெட்டின் விலை அதிகமாக இருப்பதால் பயணம் செய்ய இயலாது என்று நினைத்திருப்போம். அதுதான் இல்லை!
முதலில் ஒரு விமான பயனச்சீட்டு பதிவு செய்ய வேண்டும் என்றால் இணையத்தளத்தில் இது தொடர்பான கட்டணம் குறைந்த விமானம் காண்பிக்கும் செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டும் . இந்த செயலி மூலம் எந்த விமானம் குறைந்த கட்டணம் வசூலிக்கிறதோ அதன் பட்டியலை நம்மால் எளிதில் காணமுடியும்.
அதனடிப்படையில் குறைந்த கட்டணம் கொண்ட இருக்கையை நம்மால் தேர்வு செய்யமுடியும்.
இரண்டாவதாக உங்கள் கணினியில் உள்ள தேடுபொறி திருத்தத்தில் Incoginito mode என்ற வகையை தேர்வு செய்துவிட்டு சர்ச் செய்ய வேண்டும் . ஏன் என்றால் நாம் அதிகமாக வைத்திருக்கும் குக்கீஸ்கள் மூலம் டிக்கெட்டின் விலை அதிகமாக காட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
மூன்றாவதாக VPN எண்னை உபயோகப்படுத்தி டிக்கெட் பதிவு செய்துகொள்ளலாம் VPN என்பது மெய்நிகர் தனியார் நெட்வொர்க்கைக் குறிக்கிறது. இதை விரிவாக விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் என்று கூறுவர். VPN என்பது இணையம் போன்ற குறைவான பாதுகாப்பான நெட்வொர்க்கில் பாதுகாப்பான மற்றும் மறைகுறியாக்கப்பட்ட இணைப்பை உருவாக்கும் தொழில்நுட்பமாகும். அதேபோல இணையம் போன்ற பொது நெட்வொர்க்கைப் பயன்படுத்தி ஒரு தனியார் நெட்வொர்க்கை நீட்டிப்பதற்கான ஒரு வழியாகும். இந்த VPN எண்னை உபயோகம் செய்து டிக்கெட் பதிவு செய்தால் விலை குறைவாக இருக்கும் .
அதேபோல செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பயனச்சீட்டு குறைந்த விலையில் இருக்கும் அதைத்தொடர்ந்து சர்வதேச விமானப்பயணம் மேற்கொள்ள நினைத்தால் புதன்கிழமை டிக்கெட் பதிவு செய்ய குறைவாக இருக்கும் . இனி விமானத்தில் பயணம் செய்யுமுன் இதுபோன்ற விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள். உங்களை சார்தவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.