இராமேஸ்வரத்தில் அப்துல் கலாமின் நினைவுகளுக்கு மரணமில்லை என்ற நூலை வெளியீட்டுப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அப்துல் கலாம் எந்த இலக்கை நோக்கிப் பயணிக்க நினைத்தாரோ அந்தக் கனவைப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி வருகிறார் என்று தெரிவித்தார்.
பிருத்வி ஏவுகணை உருவாக்கத்திலும், பொக்ரான் அணுகுண்டு சோதனையிலும் கலாமின் சிறந்த பங்களிப்பை அமித்ஷா நினைவுகூர்ந்தார்.
அப்துல் கலாமின் செயல்பாடுகள் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு ஒரு பாடமாக உள்ளது என்று சொன்ன அமித்ஷா, மேலும் அப்துல் கலாமிற்குக் குழந்தைகள் இல்லை என்றாலும் பாரதத்தின் ஒவ்வொரு குழந்தையும் கலாமின் குழந்தைகளே என்று தெரிவித்தார் .
இந்த நூல் வெளியீட்டு விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக, தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாத யாத்திரையைத் தொடங்கி வைக்க இரண்டுநாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 28ம் தேதி இராமேஸ்வரம் வந்தார். அன்று இரவு நடந்த பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு யாத்திரையைத் கோடி அசைத்துத் தொடங்கி வைத்தார்