அடல் வயோ அபியுதய் யோஜனா திட்டத்தின் கீழ் 3.63 லட்சத்துக்கும் மேலான மூத்த குடிமக்கள் பயன்பெற்றுள்ளனர்.
Sep 18, 2025, 10:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அடல் வயோ அபியுதய் யோஜனா திட்டத்தின் கீழ் 3.63 லட்சத்துக்கும் மேலான மூத்த குடிமக்கள் பயன்பெற்றுள்ளனர்.

Web Desk by Web Desk
Jul 13, 2023, 07:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்காக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.   கடந்த ஒன்பது ஆண்டுகளில், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், மூத்த குடிமக்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ளவர்களின் நலனை நோக்கமாகக் கொண்ட பல திட்டங்களை இந்த அமைச்சகம் தொடங்கியுள்ளது.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட அடல் வயோ அபியுதய் யோஜனா (ஏவிஒய்ஏஒய்) என்ற திட்டம் இந்தியாவில் மூத்த குடிமக்களின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு விரிவான முன்முயற்சியாக உள்ளது.

மூத்த குடிமக்களுக்கான தேசிய செயல் திட்டம் (என்ஏபிஎஸ்ஆர்சி) மாற்றி அமைக்கப்பட்டு, அடல் வயோ அபியுதய் யோஜனா (ஏவிஏஒய்) என்று பெயரிடப்பட்டு 2021-ம் ஆண்டு ஏப்ரலில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது.

அடல் வயோ அபியுதய் யோஜனா (ஏவிஒய்ஏஒய்) என்ற மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டம், மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு இல்லங்களை நடத்துவதற்கு தகுதியான நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்கிறது.

தற்போது இந்த திட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் 552 மூத்த குடிமக்கள் இல்லங்கள், 14 தொடர் பராமரிப்பு இல்லங்கள், 19 நடமாடும் மருத்துவப் பிரிவுகள் மற்றும் 5 பிசியோதெரபி கிளினிக்குகள், பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

சுமார் 1.5 லட்சம் பயனாளிகள் இந்த முதியோர் இல்லங்களில் தங்கியுள்ளனர். நாடு முழுவதும் 361 மாவட்டங்களில் இவை உள்ளன. கடந்த 3 நிதியாண்டுகளில் மொத்தம் ரூ.288.08 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு வகைகளில் பயன் அடைந்த மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை 3,63,570 ஆகும்.

ஏவிஒய்ஏஒய் திட்டத்தின் கீழ் உள்ள மற்றொரு அம்சம் ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா (ஆர்விஒய்) ஆகும். வயது தொடர்பான ஏதேனும் இயலாமை அல்லது பலவீனத்தால் பாதிக்கப்பட்ட தகுதிவாய்ந்த மூத்த குடிமக்களுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.   குறைந்த பார்வை, செவித்திறன் குறைபாடு, பற்கள் இழப்பு போன்றவற்றை சமாளிக்க உதவும் வகையில் சாதனங்கள் இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள’ பிரிவைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

ராஷ்ட்ரீய வயோஸ்ரீ யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 269 முகாம்கள் நடத்தப்பட்டு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ், கடந்த 3 நிதியாண்டுகளில் மொத்தம் ரூ. 140.34 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 130 முகாம்களின் மூலம் 1,57,514 பயனாளிகளுக்கு மொத்தம் 8.48,841 உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மூத்த குடிமக்களுக்காக  எல்டர்லைன் என்ற தேசிய உதவி எண் உள்ளது.

மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும், இலவச தகவல், வழிகாட்டுதல், ஆதரவு ஆகியவற்றுக்காகவும் கட்டணமில்லா தொலைபேசி எண் 14567 தொடங்கப்பட்டுள்ளது. 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்பாட்டில் உள்ள எல்டர்லைன் உதவி எண், வாரத்தின் 7 நாட்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படுகிறது.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் அடல் வயோ அபியுதய் யோஜனா, இந்தியாவில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வு மற்றும் அவர்களுக்கு அதிகாரமளித்தலுக்கான அரசின் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.

Tags: Government SchemeSenior Citizens
ShareTweetSendShare
Previous Post

மத்திய இரயில்வேயின் வருவாய் கூடியுள்ளது -எப்படி?

Next Post

உச்ச நீதிமன்றத்திற்கு இரண்டு நீதிபதிகள் நியமனம்- குடியரசுத் தலைவர் உத்தரவு

Related News

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies