சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் உள்ளிட்ட, புதிய திரைப்படங்கள் இந்த வாரம் திரைக்கு வந்துள்ளன. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படம் தமிழில் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். இவருக்கு இது இரண்டாவது படமாகும். இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லன் கெட்டப்பில் நடித்துள்ளார். நடிகை சரிதா, தெலுங்கு நட்சத்திரமான சுனில் யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சில காட்சிகளில் தமிழிலும், தெலுங்கு நடிகர் ரவி தேஜா தெலுங்கிலும் பின்னணி குரல் கொடுத்துள்ளனர். இப்படத்திற்கு ‘ஆடை’, ‘மண்டேலா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். அரசியல்வாதிக்கும் சாமானிய மனிதனுக்கும் ஏற்படும் முரண்பாட்டை அதிரடி ஆக்சன் படமாக மாவீரன் படத்தை மான்டோனன் அஸ்வின் இயக்கியுள்ளார்.
பாபா பிளாக் ஷீப் தமிழ் திரைப்படம்
ஒரு பள்ளியைச் சுற்றி, குழந்தைகளின் மகிழ்ச்சி, துக்கங்கள், மகிழ்ச்சிகள் மற்றும் மோசமான செயல்பாடுகளைச் சுற்றி வரும் கதை பிளாக் ஷீப்.இப்படத்தில் ஆர்.ஜே.விக்னேஷ், அம்மு அபிராமி அப்துல் அயாஸ் நரேந்திர பிரசாத், மதுரை முத்து, நடிகை அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், யூட்யூப் பிரபலம் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பள்ளிக்கால வாழ்வை மையப்படுத்தி படத்தை இயக்கியுள்ளார்.
பேபி- தெலுங்கு படம்
தெலுங்கு படத்தில் பிரபலமான விஜய் தேவர்கொண்டான் தம்பியின் படமான பேபி படம் தெலுங்கில் திரைக்கு வந்துள்ளது. இத்திரைப்படத்தில் ஆனந்த் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக வைஷ்ணவி சைதன்யா நடித்துள்ளார். நடிகர்கள் நாகேந்திர பாபு
விராஜ் அஸ்வின், நடிகை சீதா, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் ராஜேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
பள்ளி, கல்லூரிகளில் ஏற்படும் முக்கோண காதல் கதையை மையமாக இப்படம் வெளியாகியுள்ளது.