டெஸ்லா மற்றும் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் இயங்கும் xAI என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி உள்ளார்.
சாம் ஆல்ட்மேன் தலைமையில் ஆன OpenAI என்ற நிறுவனத்தின் இணைநிறுவனர் ஒருவர் xAIஎன்னும் புதிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனத்தை எலான் மஸ்க் தன் குடையின் கீழ்க் கொண்டு வந்திருக்கிறார் .
xAI நிறுவனத்தின் இணையத் தளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘பிரபஞ்சத்தின் உண்மைத்தன்மையைப் புரிந்துகொள்வது’ எங்கள் நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் ஓபன் ஏஐ மற்றும் கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்களில் அனுபவம் பெற்ற பொறியாளர்களின் குழுவைக் கொண்டுள்ளது. xAI Twitter Spaces அரட்டையை நடத்த உள்ளது.
இப்போது உலகை ஆட்டிப்படைக்கும் ஓபன் ஏஐ உருவாக்கத்தில் ஏற்கெனவே இருந்த எலான் மஸ்க், ஓபன் ஏஐ , மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வசம் சென்றதைத் தொடர்ந்து, எங்களின் நோக்கம் இதுவல்ல என்றும் ஓபன் ஏஐ லாப நோக்கமற்று இருக்க வேண்டும் என்றும் கருத்தை முன்வைத்துவிட்டு அதன் தொழில்நுட்ப உருவாக்கக் குழுவில் இருந்து எலான் மஸ்க் வெளியேறினார்.
மீண்டும் ஏஐ துறைக்குள் நுழைய முடிவு செய்த எலான் மஸ்க் ,செயற்கை நுண்ணறிவு துறையில் கால்பதிக்கும் முன்னோட்டமாக ‘TruthGPT’ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்கினார். இப்போது ஏஐ தொழில்நுட்பத்தால் இயங்கும் ChatGPT-க்கு போட்டியாக, xAI நிறுவனத்தை தொடங்கியுள்ளார் எலான் மஸ்க்.
இப்போது அவர் பிரபஞ்சத்தின் அடிப்படை இயல்பை ஆழமாகப் புரிந்துகொள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வளர்ப்பதன் மூலம், அது இயற்கையாகவே மனித குலத்திற்கு நன்மையளிக்கும் செயல்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்று தான் நம்புவதாக மஸ்க் தெரிவித்துள்ளார்.
மேலும் , xAI உலகத்தின் உண்மைத்தன்மையைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் என்பதுதான். இது மனித நேயத்திற்கு ஆதரவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று மஸ்க் கூறியுள்ளார்.