பிரான்ஸ் அதிபரின் அழைப்பை ஏற்று, அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பாரிஸ் சென்றுள்ளார்.
இந்நிலையில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளதை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,
சந்திராயன் மூன்று திட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள், இந்திய விண்வெளி துறையை, பொறுத்தவரையில் 14 ஜூலை 2023 எப்பொழுதும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். சந்திராயன் நிலவு பயணம் நமது மூன்றாவது நிலவு பயணம். சந்திராயன்-3 நமது தேசத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து செல்லும் என பதிவிட்டுள்ளார்.