நிலவின் தென்துருவத்தை யொட்டிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திராயன்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் வடிவமைத்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஜூலை மாதம் 14 ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு எல் வி எம் 3 என்ற ஏவுகணை மூலம் சந்திராயன் – 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் சீறிப்பாய்ந்த அடுத்த 16 நிமிடத்தில் பூமியிலிருந்து 176 கிலோமீட்டர் தொலைவில் புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
கடந்த 15 அன்று, புவி வட்ட பாதையில் சந்திரயான் விண்கலத்திற்கு உந்து விசை அளிக்கப்பட்ட நிலையில் 173*41762 கிமீ புவிவட்ட பாதையில் சந்திரான்-3 விண்கலம் சுற்ற தொடங்கியது.
Chandrayaan-3 Mission:
The second orbit-raising maneuver (Earth-bound apogee firing) is performed successfully.The spacecraft is now in 41603 km x 226 km orbit.
The next firing is planned for tomorrow between 2 and 3 pm IST.
— ISRO (@isro) July 17, 2023
புவி வட்ட பாதையில் சந்திரயான் விண்கலம் நேற்று 173*41762 பாதையிலிந்து மேலும் ஒரு உந்து விசை அளிக்கப்பட்ட நிலையில் முதல் சுற்று கடந்து, விண்கலம் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. இரண்டாவது சுற்றில் 226*41603 கிமீ புவி வட்ட பாதையில் சுற்றி வருகிறது . சந்திராயன் 3 விண்கலம் இப்போது 41603 கிமீ x 226 கிமீ சுற்றுப்பாதையில் உள்ளது. இரண்டாவது சுற்றுப்பாதையை உயர்த்தும் பணி வெற்றிகரமாக முடிந்தது. சுற்று பாதையை உயர்த்தும் பணி மீண்டும் நாளை மதியம் 2 மணி முதல் 3 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.