புது தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு’ என்ற தலைப்பிலான பிராந்திய மாநாட்டிற்கு தலைமை வகித்து
இன்று உரையாற்றினார்.
இந்த மாநாட்டின் போது, மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில், ரூ.2,416 கோடி மதிப்பிலான 1,44,000 கிலோ எடையுள்ள போதைப்பொருள்கள் அழிக்கப்பட்டது. இந்த போதைப் பொருட்கள், பல்வேறு மாநிலங்களின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுகளின் (ANTF) ஒருங்கிணைப்புடன் தேசிய போதைப் பொருள் தடுப்பு அமைப்பால் (NCB) பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க, போதைப்பொருள்களுக்கு எதிரான தீவிரக் கொள்கையை அரசு கடைபிடிக்கிறது.
ஜூன் 01, 2022 முதல் ஜூலை 15, 2023 வரை, தேசிய போதைப் பொருள் தடுப்பு அமைப்பு (NCB) மற்றும் மாநிலங்களின் போதைப் பொருள் எதிர்ப்புப் பிரிவுகளின் (ANTF) மூலம் மொத்தமாக சுமார் 8,76,554 கிலோ கிராம் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு, சுமார் ரூ.9,580 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் அழிக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள்கள் அழிக்கப்படுவதன் மூலம், கடந்த ஒரு வருடத்தில் அழிக்கப்படும் மொத்த போதைப் பொருட்களின் அளவு சுமார் 10 லட்சம் கிலோவை எட்டியது. இதன் மதிப்பு சுமார் ரூ.12,000 கோடி ஆகும். போதைப் பொருள்கள் இல்லாத இந்தியா என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்கும் வகையில், போதைப்பொருள் ஒழிப்பு இயக்கம் தீவிரமாகத் தொடர்ந்து நடைபெறுகிறது.