சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், எண்ணித்துணிக நிகழ்வின் ஏழாவது பகுதியில், தொழில்முனைவோர் மற்றும் பெருநிறுவன தலைமை நிர்வாகிகளுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது, தொழில் வளர்ச்சி, முதலீடு, வேலை வாய்ப்பு குறித்த கருத்துகளை கவர்னர் ஆர்.என்.ரவி கேட்டறிந்தார்.
கூட்டத்தில் பேசிய தமிழக ஆளுநர் ரவி,
தோல்வியை கண்டு பயப்பட வேண்டாம், பாடம் கற்றுக்கொள்ளுங்கள். நான் பலமுறை தோல்வியை சந்தித்தேன். இந்தியாவில் பல திறமைசாலிகள் இருக்கின்றனர். இந்தியாவின் திறமையினால் தான் வெளிநாடுகள் வளர்ச்சி அடைக்கின்றனர்.
130 கோடி மக்கள் உள்ள இந்திய நாட்டில் அரசு மூலம் மட்டுமே அனைத்தையும் சாதிக்க முடியாது. இந்தியா தொடர்ந்து முன்னேறி வர உங்களை போன்ற தொழில் முனைவோர்கள் காரணம். நாடு வளர்ச்சி அடைய வேண்டும் எனில் ஒவ்வொரு மனிதரும் வளர்ச்சியை நோக்கி நகர வேண்டும். கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்தவர்கள் நம்மை பின்னோக்கி அழைத்துச் சென்றனர். நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் நபர்களை மட்டுமே நான் எதிரியாக நினைக்கிறேன்.
இந்திய பொருளாதாரம் உலக அரங்கில் வேகமாக முன்னேறி வருகிறது. அதிக தொழில் முனைவோர் கொண்ட எண்ணிக்கையில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. பல ஆண்டுகளாக இந்தியாவை வளர்ந்து வரும் நாடு என்று தான் சொல்கிறோம், என்று தான் வளர்ச்சி அடைந்த நாடு என்று சொல்வோம் என்ற கேள்விக்கு? 2047 ஆம் ஆண்டில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும். 40 % ஆன்லைன் பண பரிமாற்றங்கள் இந்தியாவில் நடக்கிறது.
கடந்த ஆண்டில் கூட தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில் அதிக ஆரம்ப சுகாதார நிலையங்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது 15 ஆயிரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது.
அனைத்து மாற்றங்களும் நிகழ்ந்து வருகிறது, டிஜிட்டல் டெக்னாலஜி வளர்ந்து வருகிறது. கோவிட் தடுப்பூசி செலுத்தியதும் கோவின் [cowin] செயலி மூலம் உடனே தடுப்பூசி செலுத்தியதற்கான குறுஞ்செய்தி வருகிறது. காலநிலை பிரச்சினையை இந்தியா தான் சிறப்பாக கையாண்டு வருகிறது.
இந்தியா வளரும் போது இந்திய மக்களின் மதிப்பும் உயரும். நம் பெற்றோர்களை பார்த்துக் கொள்வது நம் கடமை என தெரிவித்தார்.