கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த OpenAI நிறுவனம் ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கொண்ட Chatbotடை வெளியிட்டு இணையத்தையே அதிரவைத்தது.
இந்த OpenAI நிறுவனம் முதலில் வலைத்தள வடிவில் மட்டுமே ChatGPTயைப்பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது. கடந்த மே மாதம், ஆப்பிள் பயனர்களுக்கான ChatGPT – யின் IOS செயலியை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது.
தற்போது OpenAI நிறுவனம், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான செயலியை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.
Announcing ChatGPT for Android! The app will be rolling out to users next week, and you can pre-order in the Google Play Store starting today: https://t.co/NfBDYZR5GI
— OpenAI (@OpenAI) July 21, 2023
அடுத்த வாரம், முதலில் அமெரிக்க பயனர்களுக்கும் அதனைத் தொடர்ந்து பிற நாட்டு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் ChatGPT -யை வெளியிடவிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று (22.07.2023) முதலே ChatGPT -யின் ஆண்ட்ராய்டு வெர்ஷனுக்கு பிளேஸ்டோரில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் OpenAI நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.