நமோ செயலி- இந்திய அளவில் தமிழகம் 3வது இடம்.
May 21, 2025, 03:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

நமோ செயலி- இந்திய அளவில் தமிழகம் 3வது இடம்.

Web Desk by Web Desk
Jul 28, 2023, 01:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசு திட்டங்களின் பயனாளிகள் அனைவரையும் கண்டறிந்து, ‘நமோ’ செயலியில் பதிவேற்றம் செய்வதில் தமிழகம் மூன்றாவது இடத்தை பிடித்ததற்காக மகளிரணியினருக்கு, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டுக்களைத்  தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மத்திய அரசின் நலத்திட்டங்களால் பல கோடி ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். அவர்களை கண்டறிந்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து நமோ செயலி மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நமோ செயலி 2015 ஜூன் 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி இந்த செயலியில் வெளிவருகிறது.

மத்திய அரசின் நலத் திட்டங்களால் லட்சக்கணக்கான தமிழக மக்கள் பயனடைந்து வருகின்றனர். பிரதமர் வீடு கட்டும் திட்டம், சாலை வியாபாரிகளுக்கு கடன் உதவி, விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் மற்றும் உரத்திற்கான மானியம், இப்படி பிரதமர் மோடியின் மக்கள் நலத்திட்டங்களைச்  சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த நிலையில், தமிழகத்தில் மத்திய அரசின் மக்கள் நலதிட்டங்களால் பயனடைந்தவர்களைக்  கண்டறிந்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்து, அதனை நமோ செயலியில் பதிவேற்றம் செய்வதில் தமிழக பாஜக மகளிர் அணியினர் திறம்பட செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடு முழுவதும் மாநிலங்களிடையே, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  தலைமையிலான மத்திய அரசின்  நலத்திட்டங்களால் பயனடைந்தவர்களைக்   கண்டறிந்து, அவர்களின்  புகைப்படங்களை நமோ செயலியில் பதிவேற்றம் செய்யும் நிகழ்வில், தமிழகம் இந்திய அளவில், மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில், 5000 பயனாளிகளுக்கு மேல், புகைப்படங்களை நமோ செயலியில் பதிவேற்றம் செய்த பாஜக மகளிரணியினரைச் சந்தித்து வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொண்டேன். தமிழக அளவில், ஐந்தாயிரம் பயனாளிகளுக்கு மேல் கண்டறிந்து, அவர்கள் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்த பாஜக சகோதர சகோதரிகள் 13 பேரில், 11 பேர், கோவை பெருங்கோட்ட மகளிரணியினர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை இன்று சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.

இந்த நிகழ்வினை அகில இந்திய அளவில் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தி வரும், மகளிர் அணியின் தேசியத் தலைவி வானதி சீனிவாசன் அக்கா அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகத்திலிருந்து பெருவாரியான வெற்றியாளர்களைப் பெற்றுத்தந்த கோவை பெருங்கோட்டப் பொறுப்பாளர் ஏ.பி.முருகானந்தம் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: PM ModiNamo app
ShareTweetSendShare
Previous Post

10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் 3 ஆண்டுகளில் காணாமல் போயிருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம்  அறிக்கை

Next Post

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரமாணப் பத்திரம் -மத்திய உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

Related News

பாகிஸ்தான் தூதரகத்தில் பார்ட்டி : ISI ஏஜென்ட்டாக செயல்பட்ட யூ டியூபர் கைதின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

திருப்பூர் : அடியாட்களுடன் வீடு புகுந்து இளைஞரை தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர்!

குஜராத் : சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகள் இடிப்பு!

வனத்துறை அலட்சியம் : வயிற்றில் குட்டியுடன் உயிரிழந்த யானை!

பாக். உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 6 பேர் கைது!

சேலத்தில் உச்சம் தொட்ட சின்ன வெங்காயம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.12 கோடியை கடந்த மாமன் பட வசூல்!

வார் 2 படத்தின் டீசர் வைரல்!

ரூ.75 கோடியை தாண்டி வசூலித்த டூரிஸ்ட் ஃபேமிலி!

ரிது வர்மாவின் தெலுங்கு வெப் தொடரின் ட்ரெய்லர் வெளியானது!

தமிழில் 96 மதிப்பெண் பெற்று மகாராஷ்டிரா சிறுவன் அசத்தல்!

விஜய் சேதுபதியின் ACE படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

கோவை : உடல்நலக்குறைவால் பெண் காட்டு யானை உயிரிழந்த சம்பவம்!

தூத்துக்குடி உடன்குடி அனல்மின் நிலையத்தில் கிராம மின் பகிர்மான கழக சேர்மன் ஆய்வு!

இஸ்ரேலுக்கு 3 நட்பு நாடுகள் திடீர் எதிர்ப்பு!

சேலம் : சிறுவனின் உயிரைக் காக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies