2019- ஆம் முதல் 2021-ஆம் ஆண்டு வரையில் நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போனதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி நாடு முழுவதும் பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் காணாமல் போவது அதிகரித்து வருவதாகவும், கடந்த 2019 முதல் 2021ம் ஆண்டு வரை மட்டும் 18 வயதிற்கு மேற்பட்ட 10.61 லட்சம் பெண்கள் காணாமல் போயிருப்பதாகவும் தெரியவருகிறது.
இதில் 2021-ஆம் ஆண்டில் மட்டும் 3.75 லட்சம் பெண்கள் போயிருக்கின்றனர். மற்றும் 18 வயதிற்கு கீழ் உள்ள 2.51 லட்சம் சிறுமிகள் காணாமல் போயிருக்கின்றனர். மத்தியப் பிரதேசம், மஹாராஷ்ரா ஆகிய மாநிலங்களில் தாம் அதிக எண்ணிகையில் பெண்கள் காணாமல் போயிருப்பது குறிப்பிடத்தக்கது .
இது குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் ” பெண்கள் காணாமல் போகும் சம்பவங்களுக்கு அந்தந்த மாநிலத்தின் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் இதற்குக் காரணமான குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கவேண்டும் என்று தெரிவித்தனர் .