மீண்டும் நரேந்தர மோடி அவர்களே 3 வது முறையாக பாரதப் பிரதமராக வரவேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று மக்களைச் சந்திக்கும் வகையில் என் மண் என் மக்கள் என்ற பெயரில் ஊழலுக்கு எதிரான பாத யாத்திரையை தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கிருக்கிறார் .
கடந்த வெள்ளிக்கிழமை இந்த பாத யாததிரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இராமேஸ்வரத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
என் மண் என் மக்கள் பாத யாத்திரை நிச்சயம் ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்கும் என தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் எல்லாம் அண்ணமலையை வாழ்த்திய நிலையில் , இன்று பாத யாத்திரையின் மூன்றாம் நாளான இன்று முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தனது பாத யாத்திரையை அண்ணாமலை தொடர்ந்தார்.
முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் காந்தி சிலையிலிருந்து தொடங்கிய இன்றைய பாத யாத்திரையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.
மக்களுடன் மக்களாக நடந்து வந்த அண்ணாமலையிடம் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களைக் கொடுத்தார்கள்.
பாத யாத்திரையின் போது பிரசார வாகனத்தில் நின்றபடி கூட்டத்தினரிடையே பேசிய தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,
2024ல் மீண்டும் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே நோக்கம். இந்திய அரசியலில் கடந்த 9 ஆண்டுகளாக தான் நல்லது நடந்து வருகிறது. மத்தியில் பிரதமராக நரேந்திர மோடி வந்த பிறகு தான், இந்த நாட்டில் ஏழை மக்களுக்காக அரசு வேலை செய்கிறதுமூன்றரை லட்சம் பேருக்கு என்று வாக்குறுதி கொடுத்த திமுக இரண்டு ஆண்டுக் கால ஆட்சியில் ஒரு இளைஞர்களுக்குக் கூட வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரவில்லை.
தி.மு.க., ஆட்சியில் ராமநாதபுரத்திற்கு எதுவும் நடக்கவில்லை. வறட்சியாக தான் வைத்துள்ளனர். அரசியலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.
ஆனால், பிரதமர் நரேந்தர மோடி 2023ம் ஆண்டு முடிவதற்குள் 10 லட்சம்பேருக்கு வேலை வழங்கப்படும் என்றார். இன்று வரை 5.5 லட்சம் பேருக்கு வேலை வழங்கப் பட்டுள்ளது. மீதமுள்ள பேர்களுக்கு வரும் டிசம்பருக்குள் வேலை கிடைத்துவிடும். டெல்லி தமிழருக்காக நல்ல திட்டங்களைத் தருகிறது உதாரணமாக இங்கே முதுகுளத்தூர் பகுதி வறண்டு கிடக்கிறது. மக்கள் தண்ணீருக்காக பதூரம் கூடைதாய் எடுத்துக் கொண்டு அலையவேண்டி இருக்கிறது . எல்லோருக்கும் தண்ணீர் வசதி தரவேண்டும் என்பதற்காகவே பிரதமர் மோடி ஜல் ஜீவன் திட்டம் கொண்டு வந்தார்கள் . ஆனால் ஊழல் திமுக அரசு ஒரு கனெக்ஷனுக்கு 6000 ரூபாய் கமிஷன் வாங்குகிறது.
ஒரே குடும்பம் தமிழகத்தை ஆட்டி வைத்து கொண்டுள்ளது. குடும்ப அரசியல் அடியோடு அரசியலை நாசப்படுத்திவிடும். ஒரே ஒரு குடும்பம் தாம் ஊழல் செய்து செய்து தமிழக அரசியலைக் கெடுத்து வைத்திருக்கிறது.
இங்கே பெருந்திரளாக வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்பையும் ஆதரவையும் காட்டிய முதுகுளத்தூர் மக்களுக்கு என் நன்றிகள் என்றார் அண்ணாமலை।
ராமநாதபுரத்தில் உள்ள 4 தொகுதிகளில் 2வது தொகுதியான முதுகுளத்தூர் பகுதியில் இன்று மதியம் வரை அண்ணாமலை பாதயாத்திரை நடந்தது இதனை தொடர்ந்து அவர் பரமக்குடி செல்ல உள்ளார்.