தமிழகத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ள ஏராளமான மக்கள் நலத் திட்டங்களைப் பற்றி நேரடியாக ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று மக்களைச் சந்தித்து வரும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது பாத யாத்திரையின் 3ம் நாளான இன்று காலை 10 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பேரூந்து நிலையம் காந்தி் சிலை அருகிலிருந்து பாதயாத்திரையைத்
தொடங்கினார்.
முதுகுளத்தூர் வந்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப் பட்டது. அண்ணாமலையிடம் கோரிக்கை மனுக்கள் கொடுப்பதற்காக ஏராளமான மக்கள் காலை முதலே காத்திருந்து வழங்கினர்.
காலை முதுகுளத்தூரில் தொடங்கும் அண்ணாமலை இன்று மதியம் சாயல்குடி பகுதியில் பனை தொழிலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடுகிறார்.
சிறிது நேரம் ஒய்வுக்குப் பின் இன்று மாலை பரமகுடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது என் மண் என் மக்கள் பாதயாத்திரையைத் தொடர்கிறார்.