கோவை கார் குண்டுவெடிப்பில் மேலும் ஒருவர் கைது- தேசிய புலனாய்வு முகமை
Sep 4, 2025, 02:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை கார் குண்டுவெடிப்பில் மேலும் ஒருவர் கைது- தேசிய புலனாய்வு முகமை

Web Desk by Web Desk
Aug 2, 2023, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தற்போது 12வது நபராக முகமது இத்ரீஸ் என்ற நபரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக கடந்த அக்டோபர் 23 ஆம் தேதியன்று அதிகாலையில் மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது.
இதில் உக்கடம் ஜி.எம் நகரை சார்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் கார் வெடித்ததில், இரண்டாக கார் உடைந்து சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட போது காவல் துறையினர் சுமார் 75 கிலோ வெடி மருந்துகள், ISIS தொடர்புடைய சில சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை தமிழக போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி கோவை கார் வெடிப்பு வழக்கு, தேசிய புலனாய்வு முகமைக்கு(என்ஐஏ) மாற்றப்பட்டது.
மேலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு உதவ 2 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக விசாரணையை நடத்தி வந்தனர். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஜமேசா முபின் ஐஎஸ்ஐஎஸ் (ISIS) இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர் எனவும், முபின் இந்து  மதத்தை மட்டும் குறிவைத்து, நினைவுச் சின்னங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் தேசிய புலனாய்வு முகமை (NIA) தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்பின், இந்த வழக்கில் உமர் பரூக், பெரோஸ் கான், முகமது தவ்பிக் ஆகிய 3 பேர் உட்பட  இதுவரை  11 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.  இந்தநிலையில் கோவை கார் வெடிப்பு வழக்கில் உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த  முகமது இத்ரிஸ் என்பவரை நேற்று இரவு  என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக  கைது செய்துள்ளனர்.  இதுவரை கோவை கார் குண்டுவெடிப்பில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 12 ஆவது நபராக முகமது இத்ரீஸ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை கார் வெடிப்பு வழக்கில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானின் 53 ஆளில்லா குட்டி விமானங்கள் பறிமுதல்: மத்திய இணை அமைச்சர் தகவல்!

Next Post

பிரிஜ் பூஷன் சிங் மீதான புகார்-வழக்கை முடிக்க சிறுமி சம்மதம்   

Related News

சூளைமேட்டில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணி : விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை!

களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

தீபாவளி பரிசுக்கு நன்றி : நயினார் நாகேந்திரன்

பலுசிஸ்தான்: தற்கொலை படை தாக்குதல் – 25 பேர் பலி!

நேபாளம், பூட்டான் நாட்டு மக்களுக்கு பாஸ்போர்ட், விசா அவசியமில்லை : மத்திய அரசு

போர்ச்சுகல் : ரோப் கார் தடம் புரண்ட விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்விக்கியை தொடர்ந்து பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ!

அமெரிக்கா : ஒரு குண்டு பல்பு மாற்றுவதற்கு 20,000 டாலர் சம்பளம்!

கடையநல்லூர் நகர்மன்ற கூட்டரங்கில் பிரதமர் படத்தை வைக்க வலியுறுத்தல் – பாஜக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

சிஎஸ்கே அணியின் சேர்மனாக என்.சீனிவாசன் நியமனம்!

காலனித்துவ சகாப்தம் முடிந்துவிட்டது – புதின்

இலங்கை சுற்றுலா – இந்தியா்கள் மீண்டும் முதலிடம்!

குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்!

டென்னிஸ் கோர்ட்டில் நடனமாடிய ஜோகோவிச்!

கோவை தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை – நடனமாடி கொண்டாடிய மாணவிகள்!

லண்டனில் இருந்து உடற்தகுதியை நிரூபித்த கோலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies