பாகிஸ்தானின் 53 ஆளில்லா குட்டி விமானங்கள் பறிமுதல்: மத்திய இணை அமைச்சர் தகவல்!
Sep 5, 2026, 02:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தானின் 53 ஆளில்லா குட்டி விமானங்கள் பறிமுதல்: மத்திய இணை அமைச்சர் தகவல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 2, 2023, 12:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தான் – பஞ்சாப் எல்லையில் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களுடன் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டின் 53 ஆளில்லா குட்டி விமானங்கள் சட்டு வீழ்த்தப்பட்டிருக்கின்றன என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் நிசித் பிரமானிக் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, ஒரு எழுத்துப்பூர்வ கேள்விக்கு பதிலளித்துப் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் நிசித் பிரமானிக், “பஞ்சாப்பில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லை வழியாக தேச விரோத சக்திகள் மற்றும் கடத்தல்காரர்கள் ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்தி, ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை கடத்துகின்றனர்.

இவ்வாறு கடந்த 3 ஆண்டுகளில் ஜூன் 30-ம் வரை, ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய 53 ஆளில்லா குட்டி விமானங்கள் நமது வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கின்றன. இந்த விஷயத்தில் எல்லை பாதுகாப்புப் படை வீர்ர்கள் மூலம் நமது நாட்டின் எல்லைகளை 24 மணி நேரமும் கண்காணித்தல், திறம்பட ஆதிக்கம் செலுத்துதல், ரோந்துப் பணி, நாகாக்கள் இடுதல் மற்றும் சர்வதேச எல்லையில் கண்காணிப்பு நிலைகளை நிர்வகித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டிருக்கின்றன.

மேலும், இது தொடர்பாக எல்லைப்  பகுதியில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, ஆளில்லா குட்டி விமானத்தின் நடமாட்டம் கண்டறியப்பட்டால், உடனடியாக உள்ளூர் காவல்துறையினருக்கும், எல்லை பாதுகாப்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, ஆளில்லா குட்டி விமானங்களை கையாள்வது தொடர்பான தொழில்நுட்பத்தை மதிப்பிடுவதற்கும், பதிலடி கொடுப்பதற்கும் எல்லை பாதுகாப்புப் படை ஆணையத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் முரட்டு ஆளில்லா விமானங்கள் தொழில்நுட்பக் குழுவை நியமித்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

“தென்காசி – வாரணாசிக்கு சிறப்பு இரயில் சேவை” – தெற்கு ரயில்வே அறிவிப்பு

Next Post

கோவை கார் குண்டுவெடிப்பில் மேலும் ஒருவர் கைது- தேசிய புலனாய்வு முகமை

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் – திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி கைது!

இது போருக்கான காலம் அல்ல : இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஜெலென்ஸ்கி வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies