சீனாவில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஸ்மார்ட்போன் உபயோகிக்கும் நேரத்தை நிர்ணயித்து அந்நாட்டு அரசு புதிய சட்டத்தை வெளியிட்டுள்ளது.
சீனாவின் சைபர்ஸ்பேஸ் அமைச்சகம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் இந்த புதிய சட்டத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலான இணையத்தள சேவைகளை பெற இயலாது. மேலும், 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே இணையத்தை பயன்படுத்த முடியும்.
12 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் செய்தி சார்ந்த உள்ளடக்கம் மட்டுமே காட்டப்படும். தவறான பழக்கத்தை ஏற்படுத்தும் உள்ளடக்கம் அந்த குழந்தைகளுக்கு சென்று அடையாமல் இருக்க வேண்டும் என்று தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சீனா அரசு அறிவுரை வழங்கி உள்ளது. 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுக்கான பாடல்கள் மற்றும் சித்திர கதைகள் மட்டுமே காட்டப்படும் என்பதை
அதேபோல் 8 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் மட்டுமே இணையததை பயன்படுத்த வேண்டும். மேலும் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் மட்டுமே இணையம் பயன்படுத்த அனுமதி என்ற புதிய வழிகாட்டுதலை அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த 2019-ஆம் ஆண்டு முதலே குழந்தைகளுக்கான ஆன்லைன் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி வந்த நிலையில், மேலும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது சீன அரசு.
எந்தெந்த செயலிகளை குழந்தைகள் பயன்படுத்தலாம் என்ற பட்டியலை சீன சைபர்ஸ்பேஸ் அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை. இளம் தலைமுறையினர் இணையத்துக்கு அடிமையாவதிலிருந்து பாதுகாக்கவே இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
இந்த புதிய நேரக் கட்டுப்பாடுகள் எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்த விவரத்தை அந்நாட்டு அரசு இன்னும் வெளியிடவில்லை.