கூகிள் முதல் பக்கத்தில் அன்றைய நாட்களுக்கான சிறப்பு வாய்ந்த நபர்கள், நகரம், சின்னம் ஆகியவற்றை கௌரவப்படுத்த டூடுள் வெளியிடும். அதன் அடிப்படையில் ஆகஸ்ட் 4 அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலமான அல்டினா ஷினாசியின் வாழ்க்கையை கௌரவப்படுத்தும் விதமாக டூடுள் வெளியிட்டது.
தனது ஓவியக் கலையை பாரிஸில் பயின்ற அல்டினா, பயிற்சிக்காலம் முடிந்தவுடன் அமெரிக்கா திரும்பினார் . பின்னர் நியூயார்க்கில் உள்ள பல்வேறு ஸ்டோர்களில் ஜன்னல் அலங்காரம் செய்பவராக பணியாற்றினார். தான் பணியில் இருந்தபோது, பெண்களின் கண்ணாடிகளுக்கு வட்ட வடிவில் மட்டுமே ஃபிரேம்கள் இருப்பதை அல்டினா கவனித்தார்.
இதன் மூலம் பெண்களுக்கு வித்தியாசமாக கண்ணாடிகள் உருவாகும் நோக்கத்தில் கேட்-ஐ வடிவ ஃபிரேமை உருவாக்கினார். இது ஹார்லிகுயின் (Harlequin) ஃபிரேம்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கண்ணாடியை இவர் “venetian masquerade” என்ற முகக்கவசத்தை உதாரணமாக வைத்து கொண்டு உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கேட்-ஐ வடிவ ஃபிரேம்களை பல்வேறு முன்னணி நிறுவனங்கள் நிராகரித்தபிறகு, ஒரு உள்ளூர் கடைக்காரர் அதை வாங்கி விற்பனை செய்தார். சில நாட்களிலேயே அவை நியூயார்க முழுவதும் பிரபலமடைந்தன. 1930களின் பிற்பகுதியிலும் 1940களிலும், இந்த ஃபிரேம்கள் அமெரிக்காவின் ஃபேஷன் மற்றும் லைப்ஸ்டைல் அடையாளமாக மாறியது. பெண்கள் இன்றும் விரும்பி அணியக் கூடிய கண்ணாடி ஃபிரேம்களாக இது இருந்து வருகிறது.
சிற்பி, ஓவியர், திரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர், டிசைனர் என்ற பன்முகத் திறமைகளைக் கொண்டவர் தான் அல்டினா ஷினாசி. அவர் கடைக்களுக்கான ஜன்னல் காட்சி அலங்கார வேலைகளை செய்து கொண்டிருந்த போது பெண்களுக்கான புதிய மற்றும் கண்ணாடி சட்டங்கள் வடிவமைப்புகள் செய்வததாற்க்கான அற்புதமான யோசனை வந்தது. இன்றும் பல பெண்கள் விரும்பி அணியும் ஹார்லி குயின் பிரேம் என்ற பூனை கண் கண்ணாடி சட்டத்தை முதன்முதலில் 1940-ல் இவர் வடிவமைத்தவர்.
அல்டினா ஏராளமான ஆவணப் படங்களையும், பல்வேறு புதுமையான கண்ணாடி வடிவங்களையும் உருவாக்கியவர். மேலும் புகழ்பெற்ற ஓவியர்களான சல்வடோர் டாலி மற்றும் ஜார்ஜ் க்ரோஸ் ஆகியோரிடம் பயிற்சி பெற்றவர் ஆவார். ஓவியர் ஜார்ஜ் க்ரோஸ் பற்றி ஆவணப் படம் தயாரித்து உள்ளார். அந்தப் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. வெனிஸ் திரைப்பட விழாவில் முதல் இடத்தைப் பெற்றது. ‘தி ரோட் ஐ ஹேவ் டிராவல்ட்’ என்ற புத்தகத்தையும் அல்டினா எழுதியுள்ளார்.
அல்டினா தனது கண்டுபிடிப்புக்காக 1939ஆம் ஆண்டு லார்ட் & டெய்லர் அமெரிக்கன் டிசைன் விருது பெற்றார். அல்டினா ஷினாசி, 1999ஆம் ஆண்டு காலமானார். 2014ஆம் ஆண்டு அவரைப் பற்றிய ஆவணப் படம் ஒன்று வெளியானது.
இன்று, கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு, அல்டினாவின் பூனை-கண் வடிவமைப்பு உலகளவில் இன்றும் செல்வாக்குடன் திகழ்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட தொலைநோக்கு பார்வை கொண்ட பெண்ணுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!” என்று கூகுள் வலைப்பதிவில் தெரிவித்துள்ளது.